top of page
Search
  • Writer's pictureAcu Healer

தடுப்பூசி: அறிஞர்களும், சமூக விரோதிகளும். .

- அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக் -

தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை. நமது அரசுகள் கடும் முயற்சியில் தான் தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து தருவித்து, நம் மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றுகின்றன. இதனை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, அரசுக்கு உதவி செய்ய வேண்டும். அரசு செய்வது எப்படி தவறானதாக இருக்கும்?

- இப்படி தடுப்பூசிக்கு ஆதரவாக சில ஆங்கில மருத்துவர்களும், அறிவு ஜீவிகளும் கருத்துகளை பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார்கள். அவரவர் கருத்தினை பகிர்ந்து கொள்ளும் உரிமையை இந்திய அரசியல் சாசனம் அனைவருக்குமே வழங்கியிருக்கிறது. தடுப்பூசி பற்றி மட்டுமல்ல. . . அனைத்தைப் பற்றியும் ஒரு தனி மனிதனுடைய கருத்திற்கு முக்கியத்துவம் உண்டு. ஏனெனில் இந்தியா சர்வாதிகார நாடல்ல. ஜனநாயக நாடு.

தடுப்பூசிக்கு ஆதரவாகப் பேசுவதற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ, அதே அளவிற்கு தடுப்பூசிக்கு எதிரான கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் உரிமை உண்டு. ஆனால், அதரவானவை மட்டுமே கருத்து என்றும், எதிரானவை எல்லாம் வதந்தி என்று யார் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். அதே போல தடுப்பூசிக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் மட்டுமே அறிஞர்கள் என்றும், எதிராகப் பேசுபவர்கள் சமூக விரோதிகள் என்றும் கூட சொல்லிக் கொள்ளட்டும்.

அரசாங்கம் இன்னொரு தொழிலை அற்புதமாக நடத்திக் கொண்டிருக்கிறது – அது தான் நம் டாஸ்மாக். நம் வீட்டுக் குழந்தைகளை அவ்வப்போது டாஸ்மாக் பக்கமும் போய் வரச் சொல்ல்லாமே. . .ஏனெனில் அரசுகள் செய்வதெல்லாம் நம்மைக் காப்பதற்காகத் தானே? அரசுக்கு எதிராக, டாஸ்மாக்குக்கு எதிராகப் பேசுவது வதந்தி, பேசுபவர்கள் சமூக விரோதிகள்.

“அகலாது, அணுகாது – தீக்காய்வார் போல” அரசு முடிவுகளையும், அரசையும் அணுக வேண்டும் என்று கற்றுத்தருகிறார் ஆசான் திருவள்ளுவர். அரசு சொல்வது சரியானதாக இருக்கும் போது பின்பற்றுவதும், சரியில்லாததாக இருக்கும் போது விலகி இருப்பதுமே சரியானது. அதே போல, சட்டம் பற்றி தந்தை பெரியார் வழிகாட்டுகிறார் – நியாயமான சட்டங்களைப் பின்பற்றினால் போதும், எல்லா சட்டங்களும் நியாயமானவைகளாக இருக்க வேண்டும் என்பதில்லை.

தடுப்பூசியையும், அதன் நன்மைக் கதைகளையும் நம்புபவர்கள் தாராளமாக அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அக்கு ஹீலர்களுக்கோ, இயற்கை ஆர்வலர்களுக்கோ, சூழல் செயல்பாட்டாளர்களுக்கோ எவ்வித எதிர்ப்பும் இல்லை. ஆனால், எங்களுடைய குழந்தைகளுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்காதீர்கள்.

தடுப்பூசிக் கட்டாயச் சட்டம் அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கிறது. இலட்சக்கணக்கான பெற்றோர்கள் தடுப்பூசிகளை தங்கள் குழந்தைகளுக்கு அளிக்க விரும்பவில்லை. தடுப்பூசியை விரும்பாத பெற்றோர்களுக்கு விலக்கு அளித்தது அமெரிக்க அரசு. கட்டாயத் தடுப்பூசி சட்டம் எதுவும் இந்தியாவில் இயற்றப் படவில்லை. நடைமுறையிலும் இல்லை. ஆனால், இங்கு தடுப்பூசியை எதிர்த்துப் பேசுவதே குற்றமாம்.

# தடுப்பூசிகள் பற்றிய வழக்குகளை விசாரிப்பதற்கான தனிநீதிமன்றம் பல நாடுகளில் செயல்படுகிறது. நூற்றுக்கணக்கான வழக்குகளில் குழந்தை பாதிப்பிற்குக் காரணம் தடுப்பூசிகளே என்று அமெரிக்க நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து, நஷ்ட ஈடுகளை வழங்கியிருக்கின்றன. (ஆதாரம், ஆதாரம் என்று அறிவுப் பசி எடுத்து அலைபவர்கள் கொஞ்சம் கூகுள் தேடல் பொறியில் ANTI VACCINATION LEAQUE அல்லது VACCINATION RISK AWARENESS NETWORK அல்லது US VACCINATION COURT அல்லது ROYAL COMMISSION OF LONDON இதில் ஏதாவது ஒன்றை தட்டச்சு செய்து தேடிப் பாருங்கள். வருகிற பக்கங்களின் லிங்க் கொடுப்பதற்கே நூறு பக்க புத்தகம் தேவைப்படும்).அந்த நஷ்ட ஈடுகளை அரசுப் பணத்தில் வழங்க இயலாதென்று, தடுப்பூசிகளைத் தயாரிக்கும் கம்பெனிகளிடமே வசூல் செய்யும் யோசனையையும் அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

# தடுப்பூசிக்கு எதிராக இந்தியாவில் வழக்குகளே இல்லை என்று மார்தட்டிக் கொள்பவர்கள் கொஞ்சம் வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். 2008 திருவள்ளூரில் இறந்து போன 8 குழந்தைகள் தொடர்பான வழக்கு என்ன ஆனது? போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட சில குழந்தைகளின் மரண,ம் தொடர்பான விசாரனை என்ன ஆனது? பெண்டாவேலண்ட் எனும் ஐந்து தடுப்பூசிகளின் ஒற்றை மருந்துக்கு எதிராக ஆங்கில மருத்துவர் தொடர்ந்த உயர் நீதிமன்ற வழக்கு எங்கே? 2002 இல் உ.பி.யில் போலியோ சோட்டு மருந்து கொடுக்கும் போது போலியோ வந்த 26 குழந்தைகள் பற்றி புகார் கடித்ததையும், தர மதிப்பீட்டு கோரிக்கையும் இந்திய அரசே உலக சுகாதார நிறுவனத்திற்கு அனுப்பியது. அதன் முடிவு எங்கே? இந்தியாவில் தடுப்பூசித்திட்டங்கள் பற்றிய் தெகல்கா நிறுவனம் 2007 ஜூலை 28 இல் வெளியிட்ட ஆவணங்களின் நிலை என்ன? நம்முடைய ஊடகங்களில் தடுப்பூசி வழக்குகள் வெளிப்படுவதில்லையே தவிர, நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருக்கின்றன.

# ஆங்கில மருத்துவம் படித்த அனைவருமே தடுப்பூசியை ஆதரிக்கிறார்கள். மரபு வழி மருத்துவர்கள் மட்டுமே எதிர்க்கிறார்கள் என்ற மூட நம்பிக்கை ஒருபுறம் பரப்பப் படுகிறது. ஆனால், இது உண்மையில்லை. அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான ஆங்கில மருத்துவர்கள் தடுப்பூசியை எதிர்க்கிறார்கள். டாக்டர் வில்லியம் ட்ரெப்பிங், டாக்டர் டெட் கோரன் . .என்று பெரும் படையே அங்கு உண்டு. இந்தியாவிலும் தடுப்பூசிக்கு எதிரான ஆங்கில மருத்துவர்கள் அதிகம். டாக்டர்,ஃபஸ்லுர் ரஹ்மான், டாக்டர். சித்திக் ஜமால், டாக்டர். ஜேக்கப் புலியேல், டாக்டர். சத்யமாலா, டாக்டர்.ஹெக்டே, டாக்டர் புகழேந்தி . . . என்று தொடரும் மருத்துவர்கள் தடுப்பூசிகள் குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள். அதன் விளைவுகள் மோசமானவை என்று எச்சரிக்கவும் செய்துள்ளார்கள்.

தடுப்பூசிகளுக்குள் என்ன இருக்கிறது? உடல் எப்படி அதனை எதிர் கொள்கிறது? தடுப்பூசியின் விளைவுகள் என்ன? நடைமுறையில் தடுப்பூசிகள் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன? என்பதையெல்லாம் விருப்பு வெறுப்பின்றி ஆய்வு செய்தால் மட்டுமே புரியும். அரசுக்கு எதிரான – ஆங்கில மருத்துவத்துக்கு எதிரான கருத்துகளை எல்லாம் அறிவியலுக்கு எதிரான கருத்துகளாக சிதரிக்க முயல்பவர்கள் சிக்காலானவர்கள். தடுப்பூசிகளை விட ஆபத்தானவர்கள். அவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறிவியல் என்றால் என்ன என்பதையும், யார் விஞ்ஞானிகள் என்பதையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய காலம் இது. வால் மார்ட்டிலும் , ரிலையன்சிலும் ஏன் பதஞ்சலியிலும் கூட விஞ்ஞானிகள் வேலை செய்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் சரியானவையே என்று அறிவிப்பதற்காக விஞ்ஞானிகளையும், அறிவியலையும் கம்பெனிகள் வைத்துக் கொண்டுள்ளன. இதே போல அரசு திட்டங்கள் சரியானவைதான் என்று சொல்வதற்காக அரசு விஞ்ஞானிகளும் இங்கு நியமிக்கப் பட்டிருக்கிறார்கள்.

தடுப்பூசி போட வேண்டாம் என்று நாம் முடிவெடுத்தால் யாரும் நம்மைக் கட்டாயப் படுத்த முடியாது. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஒரு கடிதம் கொடுங்கள். ” என் குழந்தைக்கு தடுப்பூசியோ, இலவச பரிசோதனை முகாமோ, சிகிச்சை முகாமோ அவசியமில்லை. மருத்துவம் தொடர்பான எந்த நடவடிக்கையாக இருந்தாலும் என் ஆலோசனை இல்லாமல் பள்ளி நிர்வாகம் முடிவெடுக்கக் கூடாது” என்று. அக்கு ஹீலர்கள் அப்படித்தான் கொடுத்திருக்கிறோம். அதையும் மீறி கட்டாயமாகத் தடுப்பூசி போட்டே தீருவோம் என்றும் பள்ளியுல் கூறினால், தடுப்பூசியினால் என் குழந்தைக்கு ஒன்றும் ஆபத்தில்லை என்பதை அவர்கள் எழுதித் தரட்டும். நாம் கடிதம் தருவோம் அல்லது அவர்கள் கடிதம் தரட்டும். ஆங்கில மருத்துவர்களே உறுதி தராத நிலையில், தடுப்பூசி கம்பெனிகளே உறுதி தராத நிலையில் பள்ளி முதலாளிகள் பாவம் என்ன செய்வார்கள். . .?

அக்கு ஹீலர்களின் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்களாலும், பரிசோதனை முகாம்களாலும் எந்த தொந்தரவும் இல்லை. ஊசி என்றால் என்னவென்று அறியாத நிலையே இப்போதும் தொடர்கிறது. ரசாயன மருந்துகளைப் பற்றி தெரியாத “அறியாமைக் குழந்தைகளாகவே” அவர்கள் தொடர்கிறார்கள். அறிவு நோயை மட்டுமே கொடுக்கும் என்றால் எங்கள் குழந்தைகளுக்கு அறிவே வேண்டாம். ஆரோக்கியம் ஒன்றே போதும். #

45 views0 comments

Recent Posts

See All

அக்கு ஹீலர். இல.சண்முகசுந்தரம் இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் இப்படியே பயந்துகொண்டிருப்பது? கொரோனாவிற்கு மட்டுமல்ல, முகக்கவசம், சமூக இடைவெளி, சாதாரண சளி, காவல்துறை, தும்மல், பக்கத்து வீட்டுக்காரர் எ

- இல.சண்முகசுந்தரம் ஜூலை.19, ஊரடங்கின் 117வது நாள். துவக்கத்தில் மார்ச்.25ல் 618 என இருந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இன்று 10,77,945. Courtesy. THE HINDU JULY.19. தமிழகத்தில் ஏப்ரல் 2ல் 264 என இருந்த

- அக்கு ஹீலர். இல. சண்முகசுந்தரம் ஜூலை.8, வோர்ல்ட்மீட்டர் இணைய தகவலின்படி, அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 3,158,932. இறந்துபோனோர் 134,862. கொரோனாவை பார்த்து நாம் அச்சங்கொள்வதற்கு அமெரிக்க மரணங்கள்தான்

bottom of page