top of page
Search
Writer's pictureAcu Healer

கொரோனா: இப்போதேனும் சிந்தியுங்கள்இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது குறித்து…

அக்கு ஹீலர். இல.சண்முகசுந்தரம்

இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் இப்படியே பயந்துகொண்டிருப்பது?

கொரோனாவிற்கு மட்டுமல்ல, முகக்கவசம், சமூக இடைவெளி, சாதாரண சளி, காவல்துறை, தும்மல், பக்கத்து வீட்டுக்காரர் எனப் பார்க்கும், கேட்கும் அனைத்திற்கும் பயப்பட வேண்டியதிருக்கிறதே, இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே வாழப்போகிறோம்?

கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற ஊரடங்கு என்றோம். இப்போது அந்த கொரோனாவும் பரவலாகிவிட்டது. பயமும் அதிகமாகிவிட்டது. அத்தோடு, வறுமையும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

ஓடி ஒளிவதாலும், மறைந்து வாழ்வதாலும் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துவிடமுடியுமா? இனம் புரியாத பயம்தானே நாளுக்கு நாள் அதிகமாகிறது. ஆரோக்கியம் காக்க இதுதான் நிரந்தரத் தீர்வா?

இன்றே கேள்வியெழுப்புவோம் என்கிறேன் நான்.

118 நாளைத் தாண்டிவிட்டோம். இரயில், பேருந்து எப்போது இயங்குமென ஏதும் தெரியவில்லை. தனியார் நிறுவனம், பள்ளி, கல்லூரி ஊழியர்களின் துயரத்தை வார்த்தையில் சொல்லமுடியாது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடக்கூடாது என்று ஒருவர் நீதிமன்றம் செல்லுமளவுக்கு வெறுப்புணர்வும் ஒரு பக்கத்தில் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. அரசே, எனக்கும் கொடு என்று கேட்கவேண்டியவர், யாருக்கும் கொடுக்காதே என்கிறார்.

வியாபாரம், தொழிற்சாலையெல்லாம் இனி என்னாகும்? பதிலே சொல்லமுடியாத கேள்விகள் இவை.

செப்டம்பரில் அதிகமாகும், நவம்பரில் மேலும் அதிகமாகும் என்று ஆய்வறிக்கைகள் வந்து, வந்து நமது மனநிலையை தயார்செய்கிறதே, ஐரோப்பா நாடுகளில், பிற ஆசிய நாடுகளில் அப்படிப் பரவவில்லையே, இங்கு மட்டும் ஏன் இப்படிப் பரவுகிறது?

லாக்டவுனை, ஜூலை 30 அன்று ஒரு ஆய்வுக்கூட்டம் நடத்தி நீட்டிப்பார்கள். ஆக.11 அன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டு இரயில் இயக்கத்தையும் இன்னுமோர் இரண்டு மாதம் தள்ளிவைப்பார்கள். இதெல்லாம் நமக்குத் தெரியும். ஆனால், கொரோனா எப்போது ஒழியுமென்றுதான் யாருக்கும் தெரியவில்லை..

தன் வருமானத்திற்காக டாஸ்மாக்கை திறக்க, உச்சநீதிமன்றம் வரை சென்று அரசே போராடும்போது, தனிமனிதர்கள், ஏழைகள், நடுத்தர மக்கள் நிலை..? வீட்டில் தனித்திருக்க வாய்ப்புள்ளவர்கள் வெறும் பத்து சதம் கூட இல்லாத நாடு இந்தியா. மீதமுள்ள 90 சதமானோரும் என்ன செய்வார்கள்? மக்களைப் பற்றி கவலை கொள்ளாமல் தேசத்தை எப்படி நேசிப்பதென்று தெரியவில்லையே…!

ஊரடங்கு தீர்வு தருமா? அது ஒரு குறுகிய கால உதவியே தவிர, நிரந்தரத் தீர்வாகிடாது, வியாதியையும் முழுவதும் ஒழித்துவிட முடியாது என்றுதான் விஞ்ஞானமும் சொல்கிறது.

கொரோனா நம்மைவிட்டு செல்லவே செல்லாது. அதோடு, வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்றுதான் உலகெங்குமுள்ள விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஆனால், ஊரடங்கு தொடர்கதையாய் இருக்கையில் எப்படிப் பழகுவது கொரோனாவுடன்?

ஆமாம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தடுப்பூசி கண்டுபிடித்தால்தான் தீர்வு கிடைக்குமென்கிறார் ஒரு மருத்துவர்.

இல்லையில்லை, தட்டம்மை போன்ற பிற நோய்களுக்கு தடுப்பூசிகள் இருந்தும், அந்த நோய்கள் முற்றிலுமாய் அகற்றப்படவில்லை. “கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகும்கூட ஒருபோதும் ஒழிந்து போகாமல் அப்படியே இருந்து விடக்கூடும்” என உலக சுகாதார நிறுவனம் சொல்வதாய் மே.15 தினந்தந்தி சொல்கிறது.

“இந்த வைரஸ் இங்குதான் இருக்கப் போகிறது. நாம் அந்த வைரஸுடன் எவ்வாறு பாதுகாப்பாக வாழப் போகிறோம் என்பதுதான் நம் முன் இருக்கும் கேள்வி. இது குறைந்த காலகட்டத்தில் முடியக் கூடியது அல்ல” என்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் சாரா கூறுவதாக, மே28, தி ஹிந்து இதழ்.

16 நாடுகளில் தடுப்பூசி போட்ட பிறகும் போலியோ நோய் பரவியிருக்கிறது என WHO சொல்வதாக 2020 ஜன.15 தி ஹிந்து சொல்கிறது.

சுவிட்சர்லாந்தின் பெர்ன் பல்கலைக்கழக நோய் எதிர்ப்புத் துறையின் முன்னாள் இயக்குநர் பேடா எம் ஸ்டாட்லர் கரோனா வைரஸ் குறித்து எழுதிய கட்டுரையில், கரோனாவை புதிய வைரஸ் என்று கூறுவது தவறு. இதற்கு முன்பு கடந்த 2002-ல் சார்ஸ் மற்றும் சார்ஸ்-சிஓவி-2 வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு வகைதான் கரோனா.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்க்காமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிடுவதிலேயே விஞ்ஞானிகள் ஆர்வமாக இருப்பது வியப்பளிக்கிறது. என்னைப் பொறுத்த வரை நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை கரோனா வைரஸ் தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளது. அவர்களை வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்ற முன்னுரிமை அளித்தால் போதுமானது எனச் சொல்வதாக நோய் எதிர்ப்பு சக்திதான் கரோனாவை விரட்டும் என்ற தலைப்பில் ஜூலை.13 தி ஹிந்து கூறுகிறது.

ஆமாம். கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது நிரந்தர நோயெதிர்ப்பு சக்தியைத் தராது, சில நாளில் அந்த மருந்தின் வீரியம் போய்விடுமென்கிறார்கள் இன்னும் சில விஞ்ஞானிகள்.

அதே நேரத்தில், இதுதான் தடுப்பூசி, கண்டுபிடித்துவிட்டோமென ஒரு மருந்து கம்பெனி சார்பாக, அதில் பணியாற்றும் விஞ்ஞானிகளும் நாளை போட்டி போட்டுக்கொண்டு பேட்டி தரப்போகிறார்கள். ஏழு ஆராய்ச்சிகளுக்கு நிதியளிக்கிறோம், அதில் இரண்டுதான் பலனளிக்கும் என்று சொல்லும் பில்கேட்ஸும், 100 மில்லியன் டாலர்களை செலவளித்துவிட்டு ஏதோ ஒரு நம்பிக்கையோடுதான் காத்திருக்கிறார்.

சொல்பவர் அனைவரும் விஞ்ஞானிகள் என்கின்றன செய்திகள். யார் சொல்வதை நம்புவது?

நாமும் அறிவோம். ஸ்வைன் புளுவிற்கும், டெங்குவிற்கும், எய்ட்சுக்கும் இன்றுவரை தடுப்பூசியே கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆக, வருமா, வராதா? வந்தாலும் பலனளிக்குமா என்றே தெரியாத தடுப்பூசிக்காக ஊரையே செயல்படாமல் பல மாதமாய் நிறுத்திவைத்துக் காத்திருப்பது சரியாகுமா?

60 சதமான மக்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி வருகையில் நோயின் தாக்கம் குறையும், மந்தை நோய் எதிர்ப்பு சக்தியென இதற்குப் பெயரென ஊடகங்களில் மருத்துவர்களின் விவாதங்களும் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கின்றன.

பொதுமுடக்கம், தனிமைப்படுத்துதல் போன்றவற்றால் இந்த நோயை இன்றைக்குள்ள நிலையில் முழுமையாகக் கட்டுப்படுத்திவிட முடியாது. உண்மையில், பொதுமுடக்கம் என்பது ஒரு நோய்த்தொற்று பரவியிருக்கும் காலத்தை நீட்டிக்கவே செய்கிறது. கரோனா ஏற்கெனவே பரவலாகிவிட்டது. எனவே, பொதுமுடக்கத்தால் அதைக் கட்டுப்படுத்த முடியாது என்பதே என் கருத்து என்கிறார் தேசிய தொற்று நோய்ப் பரவலியல் நிறுவனத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுத் தலைவரான ஜெயப்பிரகாஷ் முளியில். (நன்றி தி ஹிந்து, ஜூலை.6)

கொசுவை அடிக்க கோடாரி வேண்டாமென இதைத்தான் தமிழக மருத்துவரும் சொல்கிறாரோ?

65 சதமானோர் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பிவிட்டார்கள். இறப்பு விகிதமும் 1.5க்கும் குறைவாகவே இருக்கிறது. மரணம் வலியுள்ளது, தவிர்க்கவேண்டியதெனினும், அதை நினைத்தே காலம் முழுவதும் பயந்துகொண்டிருக்க முடியுமா? எல்லாக் காலங்களிலும் காய்ச்சல் போன்ற சாதாரண நோய்கள் வந்து சில குழந்தையும் மரணமடைவதுண்டு, பெரியோர், இளைஞரும் மரணமடைவதுண்டு. ஆனால், மனிதகுல வரலாறு மரணத்தை எதிர்த்து முன்னேறிய வரலாறாயிற்றே..

வரலாறு மட்டுமல்ல, அச்சம் வேண்டாமென்றே நடப்பு அனுபவங்களும் சொல்கின்றன. ஊரடங்கு நீட்டிப்பு இனியும் பயன் தராதென்றே செய்திகள் சொல்கின்றன. இன்னும் எதற்காகக் காத்திருக்கிறோம்?

என்ன செய்யப்போகிறது அரசு? எத்தனை நாள்தான் இப்படியேக் கடத்துவது?

ஆள்வோருக்கு இன்றுவரை பதில் தெரியவில்லையென்றாலும், நிச்சயம் பதில் கண்டுபிடித்தே ஆகவேண்டிய கேள்விகள் இவை.

நம்பிக்கையோடு காத்திருப்போம்.

நல்ல தீர்வை அரசு அறிவிக்கும்.

227 views0 comments

Recent Posts

See All

கொரோனா: அமெரிக்க மரணங்கள் உணர்த்தும் உண்மைகள்

- அக்கு ஹீலர். இல. சண்முகசுந்தரம் ஜூலை.8, வோர்ல்ட்மீட்டர் இணைய தகவலின்படி, அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 3,158,932. இறந்துபோனோர் 134,862....

கொரோனா காலத்தில் அக்கு ஹீலர்கள் ஏன் அமைதியாக இருக்கிறோம்..? நமது கடமை என்ன..?

அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக் கொரோனா தாக்கம் பற்றிய விதம் விதமான கருத்துகள் உலக மக்கள் அனைவரையும் சுற்றி வருகின்றன. இது இலுமினாட்டிகளின் சதி...

Comentarios


bottom of page